ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் பாதிப்பு : அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி
ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் பாதிப்பு : அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அரசு ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பள்ளி இன்று பூட்டிக் கிடந்தது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை வரவைத்து பாடம் நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்