ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி : தற்காலிக ஆசிரியர்களை திருப்பி அனுப்புவதாக புகார்

ஆர்வத்துடன் வருவோர் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி : தற்காலிக ஆசிரியர்களை திருப்பி அனுப்புவதாக புகார்
x
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4வது நாளாக அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுதியானவர்களை தற்காலிகமாக நியமித்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஆர்வத்துடன் வருவோர் யாரை அணுகுவது என்ற குழப்பத்தில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்