சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் : பொன். மாணிக்கவேலிடம் வழங்க உத்தரவு

பொன்மாணிக்கவேலிடம் இருந்து பெறப்பட்ட வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்தில் அவரிடம் மீண்டும் ஒப்படைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலிடம் இருந்து பெறப்பட்ட வழக்கு  ஆவணங்களை ஒரு வாரத்தில் அவரிடம் மீண்டும் ஒப்படைக்க தமிழக அரசுக்கு,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது , கோவில்களில் புகைப்படம் எடுக்கப்படுவது தொடர்பாக நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, புகைப்படங்கள் எடுக்க கோவில் சுற்றுலாத்தலம் அல்ல எனவும், புகைப்படம் எடுக்க தடை விதிக்க உகந்த நேரம் வந்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்