குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு : ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

"பதுகாப்பு பணியில் 1,800 ரயில்வே போலீசார்"
குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு : ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
குடியரசு தினத்தையொட்டி நாடுமுழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   சென்ட்ரல்  மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கொண்டுவரும் அனைத்துப் பொருட்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. ஆயிரத்து 800 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் சாதாரண உடையிலும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்  எனவும் சென்னை மண்டல ஆணையர் லூயி அமுதன் தெரிவித்துள்ளார். அதேபோல் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் பிரிவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்