மலையேற்றம் செல்ல மீண்டும் தடை விதித்த வனத்துறை - காட்டுத்தீ எரிவதால் நடவடிக்கை
தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல தடை விதித்து மாவட்ட வனத்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில், மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மலை ஏற்றத்திற்கு குரங்கணி - டாப்ஸ்டேசன் பகுதியில் வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக, காட்டுத்தீ, கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் தீ பரவும் என்பதால், மலையேற்றத்திற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது. தடையை நீக்குவது குறித்து மீண்டும் அறிவிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
Next Story