மேகதாது விவகாரம் : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
x
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது திட்டத்திற்கு முதல்கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடாகா சார்பில் மேகதாது அணை ​தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடகாவின் வரைவு அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்