வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வெறி நாய்கள் கடித்த‌தில், நடராஜன் என்பவரது ஆடுகள் பலியாகியுள்ளன.
வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலி
x
வீட்டின் அருகே அடைக்கபட்டிருந்த ஆடுகளை, திடீரென தெருநாய்கள் கடித்து குதறுவதை கண்ட விவசாயி நடராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்துள்ளார். நாய்கள் கடித்த‌தில், இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த தெருநாய்களால் அச்சத்துடனே வீதியில் நடக்க வேண்டி உள்ளதாக பொதுமக்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்