வனத்துறையிடம் சிக்கிய சின்னதம்பி

கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை சின்னதம்பியை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.
வனத்துறையிடம் சிக்கிய சின்னதம்பி
x
தடாகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த சின்னதம்பி என்ற காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர்.

இதற்காக டாப்சிலிப் மலையில் இருந்து கலீம், முதுமலை, விஜய் மற்றும் சேரன் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இன்று அதிகாலை சோமையனூர் என்ற பகுதியில் சின்னத்தம்பி யானைக்கு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர்.

அங்கிருந்து நகர்ந்த யானை சின்னத்தம்பிs சுப்ரமணியர் கோவில் மலைப்பகுதியில் வந்து நின்றது. அதனை 4 கும்கி யானைகள் சுற்றி வளைத்தன.Next Story

மேலும் செய்திகள்