நிலைமையை பொறுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நிலைமையை பொறுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தகவல்
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகம் மீண்டும் முழு உருவம் பெறுவது, முதல் தலைமுறை வாக்காளர்கள் கையில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மாற்றம் நிச்சயம் என்று கூறிய அவர் நாடாளுமன்ற தேர்தலில் நிலைமையைப் பொறுத்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அரசியலில் நல்லவர்கள் மட்டும் இருந்திருந்தால், தான் நிச்சயம் அரசியலுக்கு வந்திருக்க போவதில்லை என்று கூறிய அவர், காவேரிக்காக நிச்சயம் போராட வேண்டும், இயற்கை படிதான் நதி ஓட வேண்டும் அது தான் சட்டம் என்று அப்போது குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்