நலவாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிருக்ருதி யானை

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க முன்கூட்டியே வெளியேறியது
நலவாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிருக்ருதி யானை
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் இருந்து  திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரசுவாமி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிருக்ருதி யானை அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கம்
போல், யானை பிருக்ருதி நடைப்பயிற்சி மற்றும் ஆனந்த குளியல் நடத்தியது. பின்னர், சமச்சீர் பசுந்தீவனத்தை உண்ட யானை, திருநள்ளாறு கொண்டு செல்லப்படுவதற்காக, லாரியில் ஏற்றப்பட்டது. பிருக்ருதி யானையும் எந்த வித தகராறும் செய்யாமல், சாய்வு தள மேடை வழியாக லாரியில் ஏறியது. மற்ற யானைகளை பிரிய மனமில்லாமல் பிருக்ருதி சென்றது, பாகன்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்