முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி

கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
சென்னையில் புதன்கிழமை சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க ஆயிரத்து 600 நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் குற்றப் பின்னணி ஆராய வேண்டும், அவ்வாறு இருப்பின் அவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரயணா மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் மூலம், 68 நிறுவனங்கள் மூலம், 2 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், நடைபெறவுள்ள மாநாடு மூலம் 2 புள்ளி 55 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை எப்படி  ஒதுக்குவீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்