மனிதர்களை சுமந்து பறக்கும் 'டிரான்' டாக்சி

ஆபத்து காலங்களில் பயணிக்க உதவும், ஹெலிகாப்டர் டாக்சியின் பயன்பாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
மனிதர்களை சுமந்து பறக்கும் டிரான் டாக்சி
x
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பேராசிரியர்கள் உள்ளடங்கிய தக்‌ஷா குழு, பல்வேறு ரக விமானங்களை தயாரித்து சாதனை புரிந்து வருகிறது. அந்த வகையில், தற்போது பேரிடர் காலங்களில் உதவும் வகையிலான Drone Taxi உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால், drone டாக்சியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். மனிதர்கள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குட்டி விமான டாக்சி, பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மருந்துகளை கொண்டு செல்லவும் உதவும். வானில் பறக்கும் டாக்சியை வடிவமைத்த தக்‌ஷா குழுவினருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்