தொடர் விடுமுறை : ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர் விடுமுறை : ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் ஒகேனக்கலுக்கு வந்தனர். இங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் குளித்த அவர்கள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆனால் ஆற்றில் ஆங்காங்கே பழைய துணிகள் தேங்கி பாசி படிந்தும், குப்பைகள் தேங்கியும் காட்சியளிக்கிறது. இதனால் ஒகேனக்கல் அருவிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்