வீரரின் கால் சட்டையை கழற்றிய இலங்கை அமைச்சர் காளை

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
x
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், காணும் பொங்கலை ஒட்டி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகளும், 697 வீரர்களும், பங்கேற்றனர். காலை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் அடக்கினர். போட்டியில், பெரிதும் அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்றாலும், 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டது. 

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் வளர்ப்பு காளை வாடி வாசலை விட்டு வெளியே சீறி வந்தபோது அடக்க முயன்ற மாடுபிடி வீரர் ஒருவரின்  கால் சட்டையை கழற்றிவிட்ட நிகழ்வு அங்கு சற்று நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது

Next Story

மேலும் செய்திகள்