எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை
x
எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த மாதம் சாத்தூர் அரசு  மருத்துவமனையில் தவறுதலாக, எச்.ஐ.வி. தொற்று உள்ள ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரவு 7 மணியளவில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது,குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாகவும், குழந்தையின் எடை ஆயிரத்து 700 கிராம் என்றும் எமது செய்தியாளரிடம் மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த அவர், 45 நாட்களுக்கு பின்னர் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்