காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்
x
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, பிராட்வே, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், அடையார், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் செய்வதற்காக இன்று காலை முதல் நள்ளிரவு வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சென்னை திரும்ப 3,776 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 11 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை சென்னையில் இருந்து 13 ஆயிரத்து 871 பேருந்துகள் மூலம் சுமார் 7 லட்சம் பேர், வெளியூர் சென்றனர். இதுதவிர, ஆம்னி பேருந்துகள், ரயில்கள் மூலமும் ஆயிரக்கணக்கானோர், வெளியூர் சென்று உள்ளனர். வரும் 18 ம் தேதி பள்ளி - கல்லூரிகள் திறப்பதால், வெளியூர் சென்ற மக்கள், சென்னை திரும்ப துவங்கி விட்டனர். இருந்தபோதிலும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், இன்று முதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்