பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
x
கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாமக்கல் அருகேயுள்ள  சிங்கிலிப்பட்டி என்ற கிராம மக்கள், பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாடுவதில்லை? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். 

நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில்  உள்ளது சிங்கிலிப்பட்டி என்ற இந்த அழகிய கிராமம்.  பொங்கல் பண்டிகையால் தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக இந்த கிராமம் மட்டும் எவ்வித ஆரவாரமும் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.  இங்கு 3 தலைமுறைகளாக யாரும் பொங்கல் கொண்டாடுவதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப்பட்ட  உணவை நாய்  ஒன்று சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையே தாங்கள் நிறுத்தி விட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், இது மூட நம்பிக்கை என 80 வயது ஒய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ கூறுகிறார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்தன. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றதால்,  பொங்கல் கொண்டாடு வதையே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.

இதுதவிர, சிங்கிலிப்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்களும், வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு, திருமணம் ஆகி வந்துள்ள பெண்களும் கூட,  பொங்கல் கொண்டாடுவதில்லை. 21 ம் நூற்றாண்டிலும் இப்படியொரு அதிசய கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்