பைக்குகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் மெக்கானிக்

இருசக்கர வாகனத்திற்கு பிறந்தநாள் கொண்டாடுவதை கடந்த 20 ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்.
x
திருச்சி மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த கமால் என்பவர், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் உள்ள இருசக்கர வாகனங்களை மனிதர்கள் போல பாவித்து வருகிறார். அதன் வெளிப்பாடாக, தனது இருசக்கர வாகனத்திற்கு கடந்த இருபது ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று, தனது பைக்குகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொண்டாட்டத்தின் போது அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளையும் வழங்குகிறார். தனது வண்டிகளால் இது வரை விபத்துகள் நிகழ்ந்ததில்லை என்ற காரணத்தால் அவற்றிற்கு ஆண்டு தோறும் பிறந்த நாள் கொண்டாடி வருவதாக கமால் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்