பொங்கல் பண்டிகை : அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாளில் 5 ஆயிரத்து 523 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை : அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு
x
சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். வெள்ளிக்கிழமை ஒரு லட்சத்து 45 ஆயிரம் பயணிகளும் , சனிக்கிழமை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகளும் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். மக்களின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு மற்றும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக 861 ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டு, அதிக கட்டணம் வசூலித்த 11 பேருந்துகள் சிறைப்பிடித்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த 2 நாட்களில் ஆம்னி பேருந்து நிர்வாகங்களிடம் இருந்த 18 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மக்கள் பண்டிகை முடித்து ஊர் திரும்ப ஏதுவாக வரும் 17 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்