லஞ்சம் வாங்கிய திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் கைது
பதிவு : ஜனவரி 12, 2019, 09:20 AM
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். திருக்கழுக்குன்றம், ராஜபாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு சென்றுள்ளார். அவரிடம் திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் பொன்பாண்டியன், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் தராததால் பாத்திரப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 ஆயிரம் ரூபாயை மூர்த்தியிடம் இருந்து சார்பதிவாளர் பெற்றபோது, அங்கு தயார் நிலையில் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. லவகுமார் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்குப் பின், சார்பதிவாளர் பொன்பாண்டியன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

பிற செய்திகள்

கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

4 views

மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

18 views

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

87 views

செய்தித் துறையில் களமிறங்கும் ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

101 views

'தாதா-87' படக்குழுவினர் மஞ்சப்பை விநியோகம்

'தாதா-87' படக்குழுவினர் வீடு தோறும் மஞ்சப்பை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

45 views

விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் : பொதுமக்கள் சிறைபிடித்து மறியல்

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.