வேலை நிறுத்த ஒத்தி வைப்பு வாக்குறுதி : உயர் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ

மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
வேலை நிறுத்த ஒத்தி வைப்பு வாக்குறுதி : உயர் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ
x
பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. டிசம்பர் 3-ம் விசாரணையின் போது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ ஜியோ தரப்பில், தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு எந்த விதமான உத்தரவாதம் அளிக்காததால், வேலை நிறுத்த ஒத்திவைப்பு வாக்குறுதியை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து வரும் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்