பேட்ட திரைப்பட வெளியீடு : திரையரங்கில் நடந்த திருமணம், சீர்வரிசை கொடுத்த ரசிகர்கள்

திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ஸ் திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர். அன்பு , காமாட்சி என்ற அந்த ஜோடிகளுக்கு, திரையரங்க வளாகத்திலே வேத மந்திரங்கள் , மேள தாளங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து , புதுமண ஜோடிகள் கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் , மகிழ்ச்சியை கொண்டாடினர்

Next Story

மேலும் செய்திகள்