ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்

பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதம் முன்பு வரை காணாமல் போன, செல்போன்களை, அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து மொபைல் நெட்வொர்க் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, செல்போன்களை துணை ஆணையர் மயில்வாகனன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருடிய செல்போன்களை கைமாற்றி குறைந்த விலைக்கு சிலர் விற்று வருவதால், பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்