பெண்களின் வலிமையை அதிகரிக்க 'சக்தி குழு' தொடக்கம்...

பெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 'சக்தி குழு' என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
பெண்களின் வலிமையை அதிகரிக்க சக்தி குழு தொடக்கம்...
x
பெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 'சக்தி குழு' என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஏற்காடு அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்களின் வலிமையை அதிகப்படுத்துவோம் உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி 'சக்தி குழு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கான அஞ்சல் அட்டையை ஆட்சியர் ரோகிணி அறிமுகப்படுத்தினர். ஏராளமான ஆசிரியைகள், மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர்  பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகர, மாவட்ட காவல் அதிகாரிகள், சுகாதாரப் பணிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்