சட்டசபையில் இன்று : 08-01-2019

கோடை காலத்தில், வறட்சியை சமாளித்து மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று : 08-01-2019
x
வறட்சியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோடை காலத்தில், வறட்சியை சமாளித்து மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சக்கரபாணி, வறட்சி மற்றும் குடிநீர் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை போல மாநிலம் முழுவதும்  தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் வறட்சியை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் கூறிய அவர், 696 கோடி செலவில் நத்தம் கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால், அந்த திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களுக்கு விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

மாணவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் 

மாணவர்கள் நகங்களை வெட்டவும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். உதகை உறுப்பினர் கணேஷ் எழுப்ப கேள்விக்கு பதிலளித்த அவர்,  ஊட்டியில் உள்ள அரசு ஆரம்ப உருது  பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார். 

கிராமப்புறங்களில் 100 பல்பொருள் அங்காடி - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கிராமப்புறங்களில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கேள்விநேரத்தின் போது பேசிய அவர், 300 வகையான பல்பொருட்கள் அதில் விற்கப்படும் என்றும், அந்த பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்