சென்னையில் புத்தக கண்காட்சி: கார்ட்டூன் மூலம் வரலாறு சொல்லும் நாவல்கள்

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை பார்வையிட வரும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
x
* சென்னை நந்தனம் திடலில், 42-வது புத்தக கண்காட்சி வாசிப்பை வாழ்க்கையாக்குவோம் என்ற நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட அரங்குகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகள், லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் என பரந்து விரிந்திருக்கிறது புத்தக கண்காட்சி.

* செல்போன், டேப்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்கள் வாசிப்பை நோசிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லும் புத்தகங்கள் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், பெரியோர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

* சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள், நாட்டின் வரலாறு, அரசியல், கலாசாரத்தை அறிந்து கொள்ள புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் புத்தக பிரியர்கள் வலியுறுத்துகின்றனர். 

* பாடம் தவிர்த்து பிற நூல்களை வாசிப்பதால், ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்கும். சொல் மற்றும் கற்பனை வளம் பெருகும். யாரிடமும் தயக்கமின்றி பேசமுடியும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தனிமனித மேம்பாட்டுக்கு புத்தக வாசிப்பு அவசியமாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்