சட்டப்பேரவையில் இன்று 07-01-2019

ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என பரவும் செய்தி குறித்து தமிழக அரசு விளக்குமாறு, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று 07-01-2019
x
ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து ?


ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என பரவும் செய்தி குறித்து தமிழக அரசு விளக்குமாறு,  சட்டப்பேரவையில் திமுக  சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், இன்றைய நிலையில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் என்பது சாதாரண விஷயம் என்றும், ரேஷன் கார்டு  வழங்குவதற்கு இதை கணக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் திட்டத்திற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், அதற்கும், தமிழக அரசின் பொது விநியோக திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டார். அனைவருக்கும் பொது விநியோக திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

நாட்டுக்கோழிகள் வளர்ப்பு திட்டம் : 10ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

நாட்டுக்கோழிகள் வளர்ப்பு திட்டத்தை, வருகிற 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அனைத்து ஊராட்சிகளை உள்ளடக்கி கிராமப்புற ஏழைப் பெண்கள் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டு கோழி குஞ்சுகள் மற்றும் அவற்றை பாதுகாக்க ஏதுவாக 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய கூண்டுகளும் வழங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். 

புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி உறுதி 

தமிழகத்தில் உள்ள மாநகரங்களில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நிதி ஒதுக்கி, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதி உறுப்பினர் கார்த்திக் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஈரோடு மாநகராட்சியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். 

சாலையோரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு - துணை முதல்வர் பன்னீர்செல்வம் 

சென்னை துறைமுகம் தொகுதியில் ஏழை, எளிய மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையில் துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் சாலை மற்றும் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்