கற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு எந்த பணிகளையும் வழங்கக் கூடாது என கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கற்பித்தல் பணி தவிர வேறு பணிகள் கூடாது : கட்டாய கல்வி சட்டத்தில் மத்திய அரசு அறிவுறுத்தல்
x
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட பலவகை பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தேர்தல் நாள் தவிர மற்ற நாட்களில் தேர்தல் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை சுட்டிக் காட்டியுள்ள ஆசிரியர்கள், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இந்த சட்டத்தின்படி செயல்படுமாறு வலியுறுத்த உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்