திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவலர்கள் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவலர்கள் எலி மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவலர்கள் தற்கொலை முயற்சி
x
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவலர்கள் எலி மருந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவெறும்பூர் அருகே வடக்குமலையை சேர்ந்த காவலர் ஜெயதேவனும், சேலத்தை சேர்ந்த பெண் போலீஸ் செண்பகமும் ஒரே காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.  இருவர் இடையே ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறியுள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதும், இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, நிச்சயதார்த்தமும் செய்து முடித்துள்ளனர். இந்நிலையில், தீராத வயிற்று வலியால் அவதிபட்டுவந்த ஜெயதேவன், கடந்த 28 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அன்று முதல் மூன்று நாட்களாக உடன் இருந்து கவனித்து வந்த காவலர் செண்பகம், ஜெயதேவன் உடல் நிலையில் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த‌தால், மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனால், இருவரும் காதலை வெளிப்படுத்திய இடமான ராமேஸ்வரத்திற்கு சென்ற செண்பகம், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்