பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரிகள்: மக்கள் நள்ளிரவில் சிறைபிடித்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் நிலத்தில் கொட்டி மூடி வந்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரிகள்: மக்கள் நள்ளிரவில் சிறைபிடித்ததால் பரபரப்பு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை  தனியார் நிலத்தில் கொட்டி மூடி வந்துள்ளனர்.  இதையறிந்த கிராம மக்கள் நேற்று நள்ளிரவு வந்த 6 லாரிகளை மடக்கியதில், அவை பிளாஸ்டிக் கழிவுகள் என்பதும்,   முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இந்த  கழிவுகளால்  அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என அந்த லாரிகளை  சிறைபிடித்தனர். அவை அபாயகரமாக மருத்துவ கழிவுகள் என்கிற தகவல் பரவி ஏராளமானோர் திரண்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உடுமலை மண்டல துணை வட்டாட்சியர் பொன்ராஜ், தளி காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார அதிகாரிகள் அந்த லாரிகளை மீட்டு  திருப்பி அனுப்பியதுடன், உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்