பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : இளைஞர்களிடையே தொடரும் கத்தி கலாச்சாரம்

சென்னை அயனாவரத்தில், தனது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : இளைஞர்களிடையே தொடரும் கத்தி கலாச்சாரம்
x
சென்னை அயனாவரத்தில், தனது பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்தில் ராட்சத மாலை, தலையில் மலர்களால் ஆன கிரீடம் என அலங்கரிக்கப்பட்ட ஒருவர், கைகளில், பெரிய பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியது போன்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ண‌மூர்த்தி, சுனில், நிவாஸ் ஆகியோர் மீது ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்