மேகதாதுவில் அணை கட்ட தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேகதாதுவில் அணை கட்ட தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
x
கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்டோர், வாகனங்களில், தஞ்சாவூர் திருச்சி, கரூர், தொட்டியம் வழியாக மேகதாது நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் நேற்று முசிறி வந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். ராசி மணல் திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்