பவானிசாகரில் விமரிசையாக நடந்த பறவைக் காவடி ஊர்வலம்

சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த முருக பக்தர்களின் பறவைக்காவடி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது
பவானிசாகரில் விமரிசையாக நடந்த பறவைக் காவடி ஊர்வலம்
x
சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த முருக பக்தர்களின் பறவைக்காவடி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். 24 ம் ஆண்டாக பறவைக் காவடி ஊர்வலம் நடைபெற்றது.  டணாய்க்கன் கோட்டை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அலகு குத்தப்பட்டதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட முருகன் தேரில் பவனி வர பக்தர்கள் பறவைக் காவடியில் தொங்கியபடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள் காவடியாட்டம் ஆடியபடி சென்றனர்.  சிறப்பு பூஜைகளை தொடர்ந்து  அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்