சேலம்: கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்ஐவி பாதிக்கவில்லை - அரசு மருத்துவமனை முதல்வர்

சேலம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்ஐவி பாதிக்கவில்லை என மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
x
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே குதிரைக்காரன் புதூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2014ல் ரத்தம் ஏற்றிய போது ஹெச்ஐவி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரத்தம் செலுத்தியதற்கான ஆவணங்களையும் அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் தந்தி டிவிக்கு சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில், ரத்தம் செலுத்தியதால் அந்த பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லை என்றார். அந்த பெண்ணுக்கு ரத்தம் கொடுத்த கொடையாளிக்கு, ஹெச்ஐவி தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்