தொடர் சர்ச்சைகளில் சென்னை ஐஐடி...

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்து வெளிமாநில மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் சர்ச்சைகளில் சென்னை ஐஐடி...
x
* தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாணவர் ரிஷிக் மாயம், சைவம், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் என சென்னை ஐஐடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ரஞ்சனா குமாரியின் தற்கொலையும் இணைந்துள்ளது. 

* ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த, இந்த மாணவி, கடந்த 2 தினங்களாக பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐ.ஐ.டி விடுதி பாதுகாப்பு ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அறை கதவு பூட்டி இருந்துள்ளது. 

* கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டூர்புரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி ரஞ்சனாவுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்