கடைசி கட்ட பணிகளில் டைரி தயாரிப்பு - பகுதிநேர ஊழியர்களாக மாறிய பட்டாசு தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தற்போது 2019 ஆம் வருடத்திற்கான டைரி தயாரிப்பின் கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடைசி கட்ட பணிகளில் டைரி தயாரிப்பு - பகுதிநேர ஊழியர்களாக மாறிய பட்டாசு தொழிலாளர்கள்
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தற்போது 2019 ஆம் வருடத்திற்கான டைரி தயாரிப்பின்  கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு டைரிகள் தயாரிப்பில் ஒருசில அச்சகங்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட இம்முறை குறைந்த அளவிலான தொழிலாளர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கையடக்க அளவு முதல் மெகா சைஸ் அளவு கொண்ட டைரி வகைகள் என எண்ணற்ற வகைகள் சிவகாசியில் தயாராகி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு பட்டாசு தொழிற்சாலைகள் இதுவரை திறக்கப்படாததால் டைரி தயாரிப்பு வேலையில் ஈடுபட்டு வருவாய் பெற முடிவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தைப்பொங்கலுடன் டைரி தயாரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால், அதன்பின் தங்கள் வருவாய் குறித்த வேதனையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்