கஜா புயலால் 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன- தமிழக அரசு அரசாணை

கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன- தமிழக அரசு அரசாணை
x
* மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 35 லட்சம் புதிய தென்னங்கன்றுகள் வாங்கப்பட உள்ளதாகவும், அதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

* புதிய கன்றுகளுக்கு பாசனம் அளிக்கும் வகையில் சொட்டு நீர் பாசன முறை செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக 43.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தென்னை வளர்ந்து பலன் தர 5 ஆண்டுகள் ஆகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் கேழ்வரகு, மக்காசோளம், குதிரைவாலி, தினை, பருப்பு  வகைகள் உள்ளிட்டவற்றை பயிரிடுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பயிருக்கும், தனித்தனி மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்