பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல் - தடையை மீறினால் அபராதம் என எச்சரிக்கை

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
x
* தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே,  14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை. அதேநேரம் தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

* சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

* இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதவிர, பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 

* இதனிடையே, பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமா? என்பது பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும்.


Next Story

மேலும் செய்திகள்