20 ஆண்டுகளாக இல்லாத அளவு கடும் குளிர் - கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
20 ஆண்டுகளாக இல்லாத அளவு கடும் குளிர் - கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
கொடைக்கானல் மலைப் பகுதிகளில்  20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு  கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில்  இந்த ஆண்டு உறைபனி குறைந்து உள்ள நிலையில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரத்தில் மேகமூட்டமாக இருப்பதால், குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பொது மக்கள் காலை, மாலை நேரங்களில் வீடுகளிலேயே முடங்கி வருகின்றனர். கஜா புயல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும், வரும் நாட்களில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து உறைபனி ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள்  சீசனை அனுபவித்து வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் காலை, மாலை நேரங்களில் குறைவாகவே காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்