பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கும் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
x
பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கும் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 14 ஆயிரத்து 263 பேருந்துகளை இயக்கவும் தமிழகத்தின் பிற ஊர்களுக்கு இடையே 10 ஆயிரத்து 445 பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இதுபோல, பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக, ஜனவரி 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுமார் 11 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன சென்னையில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள், ஜனவரி 9 முதல் 14ம் தேதி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம், கேகே நகர், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நாட்களில் தனியார் கார் மற்றும் கனரக வாகனங்களில் செல்லுபவர்கள், சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 



Next Story

மேலும் செய்திகள்