புத்துணர்வு முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து கவரும் லட்சுமி யானை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் யானை லட்சுமி, மவுத் ஆர்கன் இசைப்பது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
புத்துணர்வு முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து கவரும் லட்சுமி யானை
x
தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், அரவிந்தலோச்சனார் கோவில் யானை லட்சுமி, அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. ஸ்ரீலங்காவை பிறப்பிடமாக கொண்ட லட்சுமி யானை, மாறுபட்ட தோற்றத்தில் உள்ளது. இதன் உடல் அமைப்பு மற்ற யானைகளை போல் இல்லாமல் மெலிந்த தேகத்துடன் உயர்வாகவும் அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படுகின்றது. அதிகாலை ஐந்தரை மணியளவில், நடைப்பயிற்சி செய்யும் அந்த யானை , பின்னர் குளித்து முடித்து, கஜ பூஜையில், மவுத் ஆர்கன் வாசித்து மணி அடிக்கிறது. இதனை கண்டு பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்