தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் குறித்த புத்தகம் வெளியீடு - நூலை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான என். ஸ்ரீனிவாசன் குறித்த புத்தகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
x
பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான என். ஸ்ரீனிவாசன் குறித்த புத்தகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நூலின் முதல் பிரதியை கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுக்கொண்டார். விழாவில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ், டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் உறுதுணையாக டி.என்.பி.எல். தொடர் இருப்பதாகவும், இதற்காக தொழிலதிபர் ஸ்ரீனிவாசனை பாரட்டுவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்