தமிழ் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிக்கும் காங்கேயம் காளை

சேலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விறுவிறுப்பாக தயாராகி வரும் காளை மருது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
x
சேலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விறுவிறுப்பாக தயாராகி வரும் காளை மருது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிக்கும் காங்கேயம் காளை

அடங்க மறுக்கும் திமில்...குலை நடுங்க வைக்கும் கூரிய கொம்புகள்...அச்சத்தை ஏற்படுத்தும் கம்பீரப் பார்வை... மாட்டினங்களின் தாய் இனமான காங்கேயம் காளையை பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். வீரத்திற்கு பெயர் பெற்ற, இந்த காளையை வளர்க்கிறார் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கார்த்திக்.

வீட்டில் ஒரு குழந்தையாக வளர்க்கப்படும் மருது, பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று, மாடு பிடி வீரர்கள் கையில் சிக்கியதே இல்லை என்பது வரலாறு. நடப்பாண்டும் இந்த பெருமையை காளை தக்க வைக்கும் என அதன் உரிமையாளர் நம்பிக்கை தெரிவிக்கிறார். 

இதற்காக காளைக்கு ஊட்டசத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுவதோடு, நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, கொம்புகளை கூர் தீட்டும் பயிற்சி, கிட்ட வரும் வீரர்களை தூக்கி வீசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கன்னங்குறிச்சி கிராமமக்களிடையே மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரம் முழுவதும் புகழ் பெற்று ராஜநடை போடும் காளை மருது, வரவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் என பெருமிதத்துடன் கூறுகிறார் அதன் உரிமையாளர் கார்த்திக்...

Next Story

மேலும் செய்திகள்