கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
x
சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கிராம சுகாதார திட்ட கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவில் ரகுநாதன், லதா, மணிமாலா, சுவேந்தரன் ஹம்சாவர்த்தினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற இந்த குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிவகாசியில் உள்ள ரத்த வங்கிகளில் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த விவகாத்த்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவதுறை வட்டாரங்கள் கூறுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்