தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வங்கிகள் வேலை நிறுத்தம்

தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி ஆகியவைகளை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வங்கிகள் வேலை நிறுத்தம்
x
திருச்சி :

திருச்சி கண்டோன்மென்ட் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சேலம்:

சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி  முன்பாக அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

கோவை:

இதேபோல், கோவை ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு, வங்கி இணைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை: 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெடரல் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக பணப் பரிவர்த்தனைகள் முடங்கியதுடன், ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்