தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு
x
குமரிக் கடல், மாலத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான பகுதிகளில் நிலவி வருதால்,தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்