சென்னை மாநகராட்சி - வார்டு மறு வரையறை விவரம் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி வார்டு மறு வரையறை விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி - வார்டு மறு வரையறை விவரம் அரசிதழில் வெளியீடு
x
தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி வார்டு மறு வரையறை விவரங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆணையத்தையும் அமைத்தது. இந்நிலையில், 

கடந்த 15-ம் தேதி தமிழகத்திலுள்ள 124 நகராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து 528 பேரூராட்சிகளுக்கான விவரங்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் முதலாவதாக சென்னை மாநகராட்சியின் வார்டு மறுவரையறை விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஒவ்வொரு வார்டுகளுக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும், சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பார்க்கலாம். மறுவரையறை செய்யப்பட்ட அனைத்து வார்டுகளின் வரைபடங்களையும் அதில் பார்க்க முடியும்.

மொத்தம் 206 பக்கங்களைக் கொண்ட மாநகராட்சி மறுவரையறை விவரங்களை தமிழ்நாடு அரசு எழுது பொருள் அச்சுத் துறையிலும், அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்