"புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கிறோம்" - பிரதமர் மோடி பெருமிதம்

புதிய இந்தியாவை உருவாக்கி இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ஏழை மக்களின் வாழ்வு மேம்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்
x
புதிய இந்தியாவை உருவாக்கி இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ஏழை மக்களின் வாழ்வு மேம்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் மத்திய சென்னை, வடசென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி  காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது  பேசிய பிரதமர் மோடி புதிய இந்தியாவை உருவாக்கியிருப்பதாக  பெருமிதம் தெரிவித்தார். ஏழை மக்களின் வாழ்வு மேம்பட்டிருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு சாத்தியமாகி உள்ளதாகவும் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைவரையும் இணைத்திருப்பதாகவும்  மோடி குறிப்பிட்டார். அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

"பா.ஜ.க. வெற்றியை தடுத்திட முடியாது" 

மத்திய சென்னை, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, பாஜக வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது என்றார்.  மக்கள் நலனை மறந்து காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டினார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். சென்னை ராயபுரத்தை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து கொண்டார். 

"2022 ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு" 

மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி,  2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வரும் காலத்தில்  மீனாட்சி அம்மன் கோவிலை போல் மதுரையின் பெருமைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்