மேகதாது திட்டம் - தம்பிதுரை, கனிமொழி ஆகியோருக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

மேகதாது அணை திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டத்தை கைவிடுமாறு, அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்களுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.
x
மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும்  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், மேகதாது திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மத்திய அரசால் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்படையும் வகையில் எந்த வித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது எனவும்,எனவே, அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்