எய்ம்ஸ் மருத்துவமனை 'அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை' என அழைக்கப்படும் - ஆர்.பி.உதயக்குமார்

மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா  எய்ம்ஸ்  மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை வருவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்